ஹெல்மெட் கிளாரிஃபிகேஷன்: பிரிவெய்லிங் நார்ம்ஸ் அண்ட் டிஃப்ரென்செஸ்

ஹெல்மெட் கிளாரிஃபிகேஷன்: பிரிவெய்லிங் நார்ம்ஸ் அண்ட் டிஃப்ரென்செஸ்

"நீங்கள் புதிய சாகசங்களை எதிர்கொள்ள விரும்பும் சவாரி செய்பவராக இருந்தாலும் அல்லது

"நீங்கள் புதிய சாகசங்களை எதிர்கொள்ள விரும்பும் சவாரி செய்பவராக இருந்தாலும் அல்லது தினமும் தங்களுக்குப் பிடித்த பாதையில் சவாரி செய்பவராக இருந்தாலும், பொதுவாக இரண்டுக்கும் அத்தியாவசியமானது ஹெல்மெட் ஆகும் எனவே, ஹெல்மட் எவ்வாறு உங்கள் சவாரியுடன் ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமாகும் மிக முக்கியமான பாதுகாப்பு கியர் -- துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டால் -- உங்களுக்கும் உங்கள் தலைக்கும் ஏற்படக் கூடிய உடல் ரீதியான பாதிப்புக்கும் இடையில் ஒரு தடையாக இருப்பது உங்கள் ஹெல்மெட் மட்டுமே

பல வருட கால பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, நவீன ஹெல்மெட் உங்கள் தலையைப் பாதுகாக்கும் நேரத்தில் வசதியாகவும், இறுக்கமாகவும் பொருந்தி இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது கீழே விழும்போது, அதன் வடிவமைப்பு அடர்த்தி மிகுந்த ஃபோம் அடுக்கு மூலம் அதிர்ச்சியின் பெரும்பகுதியை உட்கிரகித்துவிடும் இது உங்கள் தலை நிற்கும் நேரத்தை ஒரு நொடியில் ஆறாயிரத்தில் ஒரு பங்கு (6 ms ) நீட்டிக்கவும் செய்கிறது இது உங்கள் மூளைக்கு ஏற்படும் உச்சகட்ட பாதிப்பை குறைக்கிறது" 

 

வெவ்வேறு நாடுகளிலும் கண்டங்களிலும் விற்கப்படும் நவீன ஹெல்மெட்கள் குறைந்தபட்ச தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்ய, அவை சில தொழில்நுட்பச் சான்றிதழ்களைக் கொண்டிருக்க வேண்டும் . 

இந்தியாவில், மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுகளுக்கான தொழில்நுட்பச் சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகின்றன சமீபத்திய திருத்தம் 2015-இல் செய்யப்பட்டது, எனவே தரநிலை IS 4151:2015 என்று குறிப்பிடப்படுகிறது 

கூடுதலாக, இரண்டு முக்கிய உலகளாவிய தரநிலைகள் உள்ளன - U.S. DOT (போக்குவரத்துத் துறை சான்றிதழ் மற்றும் ECE (ஐரோப்பாவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம் ) யுஎஸ் சாலையில் பயணிக்க DOT சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுக்களை மட்டுமே அணிய வேண்டும், அதேசமயம், ECE தரநிலை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கான சான்றிதழாகும், இது 50க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் பெரும்பாலான பந்தய அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது  

பாதுகாப்பைப் புரிந்து கொள்ள, நாம் சக்தி மற்றும் அதன் தாக்கத்துடன் தொடங்க வேண்டும் எடுத்துக்காட்டாக: அந்த சக்தி உங்கள் தலைக்கு மாற்றப்பட்டால் - ஒரு மோதலில் ஏற்படுவது போல் - விளைவுகள் துயரமாக இருக்கும் எனவே, ஹெல்மெட் அளிக்கும் பாதுகாப்பைத் தீர்மானிப்பதில் தாக்கத்தை உட்கிரகித்தல் மிகவும் முக்கியமானது . நிர்ணயிக்கப்பட்ட ஒரு உயரத்தில் இருந்து இரும்புப் பாளத்தின் மீது கீழே போடும் சோதனை மூலம் இது சோதிக்கப்படுகிறது வெவ்வேறு தாக்க சக்திகளுக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் உங்கள் தலைக்கவசத்தின் நிர்வாகத் திறன் நிலையைத் தீர்மானிக்க இந்தச் சோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது அந்தத் தகவல் உங்கள் ஹெல்மெட்டின் ஒப்பீட்டு நிலை ""பாதுகாப்பு"" என்று புரிந்து கொள்ளப்படுகிறது  

ஒரு ஹெல்மெட் எவ்வளவு "பாதுகாப்பானது" என்பதை தீர்மானிக்கும் பல முக்கியமான காரணிகள் உள்ளன ஊடுருவல் பாதுகாப்பு, முகக்கவசம் வழியாகப் பார்க்கக் கூடிய தன்மை, முகவாய்ப் பட்டை பிடிமானம், அவசர காலத்தில் ஹெல்மெட் எவ்வளவு எளிதாக அகற்றக் கூடியது மற்றும் பல சவாரி செய்யும்போது உங்கள் ஹெல்மெட் எவ்வளவு சிறப்பாகச் செயல்படும் என்பதில் இவை அனைத்தும் பங்காற்றுகின்றன 

ஒரு ஹெல்மெட் குறிப்பிட்ட சான்றிதழைப் பெறுவதற்கு முன், ஒவ்வொரு ஹெல்மெட் தரநிலையும் சோதனைகள், நடைமுறைகள், தேவைகள் ஆகியவை அடங்கிய ஒரு தனித்தன்மை வாய்ந்த திட்டடத்தைச் செயல்படுத்துகிறது சான்றிதழ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

DOT FMVSS 218 

ஹெல்மெட் பாதுகாப்புக்கான DOT தரநிலை பெரும்பாலும் ஹெல்மெட் தரநிலைகளில் மிகவும் அடிப்படையானது" என்று கருதப்படுகிறது, ஆனால் சோதனை செயல்முறை உண்மையில் மிகவும் முழுமையானது ஹெல்மெட் பிடிமான அமைப்பு, பார்க்கக் கூடிய தன்மை, ஊடுருவல் எதிர்ப்பு மற்றும் லேபிளிங் ஆகியவற்றுக்கு DOT கண்டிப்பான நிபந்தனைகளைக் கொண்டுள்ளது சான்றிதழ் வழங்கும் அமைப்பால் சோதிக்கப்படுவதற்கு பதிலாக, தனிப்பட்ட ஒப்பந்ததாரர்களால், மோசமான தலைக்கவசங்களைக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையில் ஹெல்மெட்டுகள் தரநிலைக்காக சோதிக்கப்படும் ஒரே தரநிலை அமைப்பாக DOT விளங்குகிறது தரநிலைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், உற்பத்தியாளர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதனால்தான் இது மிகவும் கடுமையான தாக்க சோதனைத் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது   

DOT Impact Test சோதனை, முன்பே நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் இருந்து ஹெல்மெட்டை இரண்டு வெவ்வேறு பரப்புகளின் மீது அல்லது இரும்பு பாளங்களின் மீது போடுவதை உள்ளடக்கியதாகும் இஇது ஒரு மோதுதல் காட்சியை உருவகப்படுத்துகிறது, மேலும் இரண்டு தனித்தனி மோதுதல் சோதனைகளின் கீழ் அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி தாக்கம் அளவிடப்படுகிறது.   

ஹெல்மெட்டில் ஊடுருவல் சோதனை, சுற்றுப்பார்வை சோதனை ஆகியவை செய்யப்படுகின்றன ஸ்ட்ராப் சோதனை, அதிக தாக்கம் ஏற்படும் சூழ்நிலையில் ஹெல்மெட்டை அதன் இடத்தில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது

 

ECE 22.05 

ECE 22.05 தரநிலை தற்போதைய DOT தரநிலையை விட மிகவும் சமீபமானது, பல வழிகளில் அதன் அமெரிக்க சகோதரரை விட விரிவான சோதனைகளின் தொகுப்பை அது வழங்குகிறது பலரால் மிகவும் நவீனமானதாகவும், விரிவான பாதுகாப்பைக் கொண்டதாகவும் கருதப்படும் ECE தரநிலைகள் ஒரு விபத்தை முழுவதுமாகத் தவிர்க்க உதவும் பாதுகாப்பு அம்சங்களைச் சோதிக்கின்றன அங்கீகரிக்கப்பட்ட முகக் கவசங்களின் பார்வைத் தன்மையின் தரத்திற்கான சோதனை மற்றும் தாக்கத்துடன் நேரடியாக தொடர்பில்லாத ஹெல்மெட் ஓட்டின் கடினத்தன்மை போன்ற பாதுகாப்பு காரணிகள் ஆகியவை இவற்றில் அடங்கும் . EECE சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் மாடல் ஒவ்வொன்றும் சந்தைக்கு வருவதற்கு முன்பு ஒரு தனிப்பட்ட ஆய்வகத்தின் மூலம் தரநிலைக்காக சோதிக்கப்படுகிறது 

 ECE ECE தாக்க சோதனையில் விளிம்புக்கல் எனப்படும் வழுவழுப்பான இரும்புப் பாளத்தின்மீது ஹெல்மெட்டின் வரையறுக்கப்பட்ட பகுதிகள் ஒருமுறை அடிக்கப்படுவதும் இதில் அடங்கும் இது தவிர ஹெல்மெட் உராய்வு எதிர்ப்புக்காகவும் சோதிக்கப்படுகிறது அஅதன் முகவாய்ப் பட்டை வழுக்கலுக்காகவும் அதன் ஓடு உருமாறுதலுக்கும் சோதிக்கப்படுகிறது"

 

"அவற்றுக்குரிய சிறப்பு சோதனைகள் மற்றும் விதிமுறைகள் நேர்மாறாக இருந்தபோதிலும், ஒரு DOT சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் ECE தரநிலைகளில் தேர்ச்சி பெறும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது இந்தியஃ தரநிலைகளைப் பொருத்த வரையில், சாலைகள் சட்டப்படி அவை இருக்க வேண்டுமெனில், ஹெல்மெட்டுகளுக்கு ISI சான்றிதழ் இருக்க வேண்டும் இதுபாதுகாப்புநிலைகளைமேம்படுத்துவதையும்,தரம்குறைந்தஹெல்மெட்விற்பனையைக்கட்டுப்படுத்துவதையும்நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தியத்தரநிலை ISI 4151 

பாதுகாப்பு தரும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுகளுக்கான இந்தியத் தரநிலை முதன்முதலில் 1993-இல் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்பட்டது - IS 4151:1993 சோதனை முறைகள் மற்றும் சோதனை விவரக்குறிப்புகள் ECE-இன் தரநிலைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டன.". 

 

அப்போதிலிருந்து, சோதனை கண்டிப்புகள் குறைந்து, படிப்படியாக ஹெல்மெட்டுக்கான நிபந்தனைகள் குறைத்து விட்டன இந்தியாவில் சராசரியாக நிர்ணயிக்கப்பட்ட வேகம் ஐரோப்பிய அல்லது அமெரிக்க சாலைகளை விட அதிகமாக இல்லை, எனவே இந்திய சாலைகளுக்கு ஏற்ப புதிய குறைக்கப்பட்ட நிலைகள் அதிகம் பொருத்தமானவை என்று ஒழுங்படுத்தும் அமைப்பால் இந்த நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறதுஒழுங்குபடுத்துதல் நாட்டில் தீர்க்க முயற்சிக்கும் மற்ற முக்கிய சவால்களில் ஒன்று, அது இறுதிப் பயனர்களால் விரைவாக ஏற்றுக் கொள்ளப்படுவதுடன், விலை நிர்ணயம்/விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் போதுமான அளவு ஹெல்மெட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதாகும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள், ISI அல்லாத ஹெல்மெட்களை விற்பனை செய்வதை கிரிமினல் குற்றமாகக் கருதி, ECE மற்றும் DOT சான்றிதழ் பெற்றிருந்தாலும், ISI அல்லாத ஹெல்மெட்களை அணியும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றன வெவ்வேறு பகுதிகளின் நிலப்பரப்பு, சவாரி தேவைகளில் உள்ள வேறுபாடு மற்றும் நிலைமைகள் ஆகியவை இந்த தரநிலைகளில் உள்ள வேறுபாட்டிற்கான காரணம் ஆகும் உதாரணமாக, இந்தியாவை ஒப்பு நோக்கும்போது மேற்கத்திய நாடுகளில் சவாரி செய்யும் வேகம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் மேலும், சவாரி செய்வது ஒரு வளர்ந்த கலாச்சாரம் மற்றும் ஓய்வுநேரச் செயல்பாடு என்பதால், சவாரி செய்பவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மிகவும் இணங்குகிறார்கள், பொருத்தமான ரைடிங் கியர் தேவை என்பதைப் புரிந்துகொள்கிறார்கள் ஆனால், இந்தியாவில், சவாரி வேகம் எப்படி இருந்தாலும், தினசரி பயணத்திற்கு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும்போது கூட, ஹெல்மெட் மற்றும் பிற ரைடிங் கியர்களை ஏற்றுக் கொள்வது குறைவாகவே உள்ளது. 

 

எனவே, நீங்கள் பாறைகள் நிறைந்த மலையுச்சிகளில் சவாரி செய்து பழக்கப்பட்டிருந்தாலும், அல்லது நகரத்தை சுற்றி வருவதற்குப் பயன்படுத்தினாலும், உங்கள் ஹெல்மெட் நடைமுறையில் உள்ள பாதுகாப்புத் தரங்களுக்கு இணக்கமாக இருப்பதை நீங்கள் உறுதி செய்யவேண்டும் ISI - 4151 - இந்திய தரச்சான்றிதழ் மட்டும் இல்லாமல், DOT - போக்குவரத்துத் துறை, யுஎஸ்ஏ மற்றும் ECE 22.05 சான்றும் அளிக்கப்பட்ட ஹெல்மெட் ஒரு சரியான தீர்வாகும், இது நடைமுறையில் உள்ள அனைத்து தரநிலைச் சான்றிதழ்களுக்கும் இடையே சமநிலையைக் கொண்டுள்ளது

இந்தச் சான்றிதழ்களின் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் தேவையான மதிப்புகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, அனைத்து 3 சான்றிதழையும் கொண்ட ஹெல்மெட் வைத்திருப்பது மிகவும் கடினம் தற்போது சந்தையில் ஏன் அத்தகைய ஹெல்மெட்டுகள் இல்லை என்பதற்கு இது ஒரு முக்கிய காரணியாகும் இருப்பினும், Royal Enfield-இல், சவாரி செய்பவர் ஒவ்வொருவரும் சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளின் பாதுகாப்போடு சவாரி செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் தேசிய, சர்வதேச சாலைகள் மற்றும் சவாரி நிலைமைகளுக்கு ஏற்றவாறு பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் இது சிறந்த சௌகரியத்தையும் அளிக்கிறது 

Street Prime வரிசை ஹெல்மெட்டுகள் எங்கள் இந்த நம்பிக்கையின் உருவமாகும் இது வெறும் 3700 ரூபாயில் இருந்து தொடங்குகிறது, இந்த வரிசை ஹெல்மெட்டுகள் DOT, ECE மற்றும் ISI ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டுள்ளன இஇது அனைத்து 3 சான்றிதழ்களும் கொண்ட ஒரு ஹெல்மெட் .

எனவே, உங்களின் அடுத்த ஹெல்மெட்டை நீங்கள் வாங்கச் செல்லும்போது, அது உங்கள் வகைக்கான சவாரியில் உங்களைப் பாதுகாக்க சான்றளிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்  

பாதுகாப்பாக சவாரி செய்யுங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்  

 

← Previous Post


CE சர்ட்டிஃபைய்டு ஜாக்கெட்ஸ் Vs CE சர்ட்டிபைய்டு ஆர்மர்

Next Post →


அக்ராஸ் வேரியிங் டெர்ரெய்ன்ஸ்

Creating an account has many benefits: check out faster, keep more than one address, track orders and more.

சுய விபரம்
அல்லது