உங்கள் மலை சவாரிகளை சிறந்த முறையில் செய்யுங்கள்

உங்கள் மலை சவாரிகளை சிறந்த முறையில் செய்யுங்கள்

மலைகளில் சவாரி செய்ய திட்டமிடுவது எப்போதுமே மகிழ்ச்சியாக  இருக்கும் சரியான

மலைகளில் சவாரி செய்ய திட்டமிடுவது எப்போதுமே மகிழ்ச்சியாக  இருக்கும் சரியான வழித்தடங்களைத் தேர்ந்தெடுத்தல், நீங்கள் பயணம் செய்த்கு அனுபவிக்க விரும்பும் இடங்களில் ஒரு பின்னைக் குத்தி வைத்தல்,  மோட்டார் சைக்கிளைத் தயார் செய்து,  நீங்கள் சவாரி செய்யும் நாள் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருத்தல். 

ஆனால் நீங்கள் எல்லாவற்றுக்கும் திட்டமிட்டுத் தயாராக இருக்கிறீர்களா 

சரத் ஷெனாய், ஒரு ஆர்வமுள்ள பயணி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கடந்த பல ஆண்டுகளாக இமயமலையில் பயணம் செய்வதில் நேரத்தைச்  செலவிட்டிருக்கிறார் அவருடைய பயணங்கள் அவரை ஜான்ஸ்கர் மற்றும் ஸ்பிட்டியில்  இருந்து நேபாளம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் வரை அவரை அழைத்துச் சென்றுள்ளன ஆனால் இமயமலைத் தொடர்கள் காட்சிகள் நிறைந்து, இயல்புநிலை மாறாமல், பிரமிப்பூட்டுடும்படி இருந்தாலும், அவை சவாரி செய்வதற்கு கடினமான இடமாகவும் இருக்கும் 

இந்த இடங்களில் கடுமையான காலநிலையால் சவாரி செய்பவர்கள் பல சமயங்களில் சிரமங்களை எதிர்கொள்வார்கள் பனிப்புண் மற்றும் உயரமான பகுதியில் இருப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைவு ஆகியவை மிகவும் உண்மையான ஆபத்துகளாக இருக்கலாம்,  மேலும் உங்கள் பயணத்தை சீக்கிரமே முடிக்க வைக்கலாம் அல்லது நீங்கள் சிக்கிக் கொள்ளலாம் தீடீர் வெப்பநிலைச் சரிவு சில நேரங்களில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்,  முழுமையாகத் தயார் செய்து கொள்ளாமல் சவாரி செய்பவர் அதனைச் சமாளிக்க முடியாத அளவுக்கு அவை மிக மோசமாக இருக்கக் கூடும் 

“2015-இல் முதன்முதலாக மலைகளுக்குச் சென்றபோது, நான் முழுமையாகத் தயார் செய்து கொள்ளவில்லை.”என்று சரத் நினைவு  கூர்ந்தார். “எனது பயணத்தின்போது தவறான கிளவுஸ்களை நான் எடுத்துச் சென்றேன்,  இதன் விளைவாக எனது 6 விரல்களும் உணர்ச்சியற்று வெளிறிப் போயின மருத்துவ உதவியின்றி என்னால்  மேற்கொண்டு சவாரி செய்ய முடியாது.” 

அன்று முதல், சரத் எந்தக் காலநிலையில் எந்த கியர் வேலை செய்யும் என்பதைப் பற்றிக் கற்பதற்கு அதிக  நேரம் செலவிட்டார் அவர் மலைச் சவாரியில் நேரக் கூடிய எந்தவொரு சம்பவத்தையும் எதிர்கொள்ளத் தன்னை எப்போதும் தயார்படுத்திக் கொள்ள  முயற்சி எடுத்துக் கொண்டார்  

சமீபத்தில் ஜன்ஸ்காரில் இருந்து சோன்மார்க் செல்லும் பயணத்தில், ஜன்ஸ்காரில் வறண்ட நிலையையும்,  சோன்மார்க்கின், அல்லது சரத் அன்பாக அழைக்கும் பெயரான ஸ்னோமார்க்கின் ஈரமான,  பனிமூட்டமான சூழ்நிலையையும் இரண்டு நாட்களில் அவர் எதிர்கொண்டார் நிலைமைகளில் மாறுதல் ஏற்படும்போது சவாரியைத்  தொடர்ந்து செய்வது மிகவும் கடினமாக இருந்திருக்கும், ஆனால் அதிர்ஷ்டவசமாக,  இந்த முறை அவர் தன்னை நன்கு தயார் செய்து கொண்டிருந்தார் 

“நான் Nirvik ரைடிங் ஜாக்கெட்டை அணிந்திருந்தேன், ஜன்ஸ்காரில் வறண்ட நிலை இருந்தபோது, அந்த ஜாக்கெட் என் உடலுக்கு நல்ல காற்றோட்டத்தை அளித்தது சரியான கியருடன் ஒரு சிறிய முன்னேற்பாடு சவாரி அனுபவத்தை  மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டும் வகையில் வானிலை குளிர்ச்சியாகவும் மோசமாகவும் இருக்கும்போது, நான் எல்லாத் திறப்புகளையும் ஜிப்பால் மூடி,  என் உடல் சூட்டைத் தக்க வைக்க மேலே ஒரு காற்றுப் புகாத ஜாக்கெட்டை அணிவேன்”, இவ்வாறு சரத்  விவரிக்கிறார்,   ஜான்ஸ்கரின் கரடுமுரடான நிலப்பகுதியில் சரத் தனது மோட்டார்  சைக்கிளில்.  

இருந்து சறுக்கி விழுந்த பிறகு சற்றுத் தடுமாறினார், சரியான கியரைப் பெற்றிருந்தது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது D3O நிலை 2 தோள்பட்டை,  மார்பு மற்றும் முதுகுப் பாதுகாப்பு அவரது ரைடிங் ஜாக்கெட்டில் இருந்ததால்,  அவர் மீண்டும் எழுந்து கால்களை ஊன்றி நிற்கவும், அவருடைய சவாரியைத் தொடரவும் முடிந்தது  

“எனக்குக் கொஞ்சம் வலி இருந்தது, ஆனால்  அதிர்ஷ்டவசமாக எலும்புகள் எதுவும் முறியவில்லை எனவே எனது ஜாக்கெட்டுக்கு நன்றி, நான் எழுந்து,  என் உடலிலிருந்த தூசை நானே துடைத்துக் கொண்டு,  மீண்டும் சவாரியைத் தொடங்கி என் வேகத்தை மீண்டும் அடைந்தேன்”  

இப்போது ஒரு அனுபவமிக்க மலைப்பயண சாகசக்காரராக உள்ள  சரத்தின் கியர் சவாரிப் பட்டியல் மிகவும் விரிவாக இருப்பதில்  ஆச்சரியம் ஒன்றுமில்லை இப்போது அவரது மலை ரைடிங் கியரில் முழுமுக ஹெல்மெட்,  அனைத்து வானிலை ரைடிங் ஜாக்கெட், ரைடிங் பேண்ட்,  Royal Enfield X TCX Stelvio நீர்ப்புகாத  ரைடிங் பூட்ஸ் மற்றும் ஒரு ஜோடி ரைடிங் கிளவுஸ்கள் ஆகியவை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன 

ஹெல்மெட்டைப் பொறுத்தவரை,  முழு முகத்துக்குமான ஹெல்மெட்டை மட்டுமே சரத் தேர்வு செய்கிறார் அவர் ஒரு அலகு போன்ற முனை கொண்ட,  மூடுபனி எதிர்ப்பு லென்ஸ் கொண்ட இரட்டை ஸ்போர்ட் ஹெல்மெட்டை வைத்திருக்கிறார் - அது அவரது சாகசங்களில் அவரைப் பாதுகாக்கும் என்று அவர் நம்பும் ஒரு ஹெல்மெட் ஆகும். 

சரத்துக்கும் சொந்தமானது Nirvik மற்றும் Khardungla V2 ரைடிங் ஜாக்கெட்டுகளையும் சரத் வைத்திருக்கிறார் உண்மையில்,  அவர் பெரும்பாலும் 130-140 நாட்களுக்கு நீடிக்கும் சவாரிகளில் செல்வதால்,  அவர் பல சமயம் இரண்டு ஜாக்கெட்டுகளையும் எடுத்துச் செல்கிறார்

“நான் வழக்கமாக இரண்டு  ஜாக்கெட்டுகளிலும் பொருந்தும் ஒரு செட் ஆர்மரை எடுத்துச் செல்வேன் பிறகு நான் இன்னோரு ஜாக்கெட்டை மடித்து சீட் பையில் வைத்திருப்பேன்,  ஏனென்றால் நீண்ட நேரம் சாலையில் செல்லும்போது அது பயனுள்ளதாக இருக்கும்”  

மலைகளின் மீதான அவருடைய முதல் சவாரியின்  அனுபவத்தின் அடிப்படையில், சரத்தின் மிகவும் மதிப்புமிக்க உடைமை Royal Enfield-இன் ஒரு ஜோடி கதகதப்பான  சவாரி கிளவுஸ்கள் ஆகும் உறைந்த பனிமலையில் சவாரி செய்யும்போது கிளவுஸ்கள் கைகளை கதகதப்பாக வைத்திருப்பதால்,  விரல்கள் மரத்துப் போகும் என்ற கவலை அவருக்கு இல்லை கிளவுஸ்களின் முக்கியத்துவத்தையும்,  அவை எவ்வாறு சரியாகப் பொருந்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்: 

“அனைத்து வானிலைக்குமான கிளவுஸ்கள் பெரும்பாலும் மிகவும் புடைத்தாற்போல் இருக்கும் நீங்கள் குத்துச்சண்டை கிளவுஸ்களுடன்  சவாரி செய்வது போல் உணர்வீர்கள் அதிர்ஷ்டவசமாக,  நான் வைத்திருக்கும் கதகதப்பான ரைடிங் கிளவுஸ்கள் வழக்கமான கிளவுஸ்களைப் போலவே பொருந்துகின்றன, மேலும் பொருட்களைபிடிக்கும்போதூ பிடிமான நன்றாகவே இருக்கிறது”  

சரத்தின் கியர் சில அற்புதமான பயணங்களை மேற்கொள்ள அவருக்கு மிகவும்  பயனுள்ளதாக இருந்திருக்கிறது சமீபத்தில், இந்த சீசனுக்காக சாலைகள் மூடப்படுவதற்கு  சற்று முன்னதாக இமயமலையில் உள்ள 14 கணவாய்களை பார்வையிட அவர் பயணம்  மேற்கொண்டார் அதாவது, ஜிஸ்பா, ஜான்ஸ்கர், லே, கேலா பாஸ், பாங்காங், ஹன்லே,  உம்லிங் லா வழியாக மோசமான வானிலையில் செல்ல வேண்டும் ஆனால் இந்த முறை,  அவர் அதிக தடைகளை எதிர்கொள்ளவில்லை, ஏனெனில் முக்கியமாக அவரது கியர் அவரைப் பயணத்திற்கு தயார்ப்படுத்தியது  

“எங்கள் பயணத்தின் ஒரு கட்டத்தில், வெப்பநிலை சுமார் -15 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது  ஆனால் நாங்கள் எங்களை நன்கு தயார்ப்படுத்திக் கொண்டு  வந்திருந்தோம், ஒன்றன் மேல் ஒன்றாக இவற்றை அடுக்கடுக்காக அணிந்தோம் - பேஸ் லேயர்,  தெர்மல் லைனர்கள், ரைடிங் ஜாக்கெட்டுகள்  மற்றும் குளிர் காற்றைத் தடுக்க மேலே ஒரு மழை லைனர்”  

சரத் தனது முதல் மலைப்  பயணத்தில் மரத்துப் போன விரல்களால் சிக்கித் தவித்து, மருத்துவ உதவியை நாட  வேண்டிய நிலை இருந்தது, இப்போது அவருக்கு அந்த நிலை  கிடையாது அவர் இப்போது அங்கு சென்று அதைச் செய்த அனுபவமுள்ள சவாரி செய்பவர் என்ற நம்பிக்கையையும் அறிவையும் வெளிப்படுத்துகிறார் அவர் தனது கியரின் முக்கியத்துவத்தைப் இதைவிட போதுமான அளவு வலியுறுத்த முடியாது என்பதை அனுபவமுள்ள சவாரி செய்பவர் எவரும் ஒப்புக் கொள்வார்கள்  

ஒரு சாகசத்தின்போது எல்லா விபத்துகளுக்கும் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள முடியாது ஆனால் சரியான கியரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் சவாரி தவறாகப் போகும் வாய்ப்புகளை நீங்கள் நிச்சயமாகக் குறைக்கலாம் வானிலை, நிலப்பகுதி மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப சரியான கியர்.”  

மலைகளுக்கான உங்கள் அடுத்த சவாரியில் செல்ல வேண்டிய வழிகள்,  பார்க்க வேண்டிய இடங்கள்,  செய்ய வேண்டிய விஷயங்களைத் திட்டமிடும்போது, உங்கள் சாகசத்திற்கான சரியான கியரை எடுத்துச் செல்வதைத் திட்டமிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் 

← Previous Post


ஒரு பெரிய சாகசத்திற்கு நீங்கள் தயாரா?

Next Post →


Royal Enfield, Better Cotton-இல் ஓர் பெருமை மிகு உறுப்பினராக உள்ளது

Creating an account has many benefits: check out faster, keep more than one address, track orders and more.

சுய விபரம்
அல்லது