ஜர்னீஸ் எக்ஸ்பிரஸ்டு த்ரு ஆர்ட்| தி ஸ்டோரி ஆஃப் AOMS2

தி ஸ்டோரி ஆஃப் AOMS2

கலை மூலம் வெளிப்படுத்தப்பட்ட பயணங்கள்|AOMS2- இன் கதை

Royal Enfield சமீபத்தில் அதன் வடிவமைப்புத் தளமான Art of Motorcycling - இரண்டாவது பதிப்பை பூர்த்தி செய்தது கலைஞர்கள், படைப்பாளிகள், மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீதான அன்பை வெளிக்கொணர்வதன் மூலம் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கு 2020ஆம் ஆண்டில் இந்தப் படைப்புத் தளம் தொடங்கப்பட்டது Art of Motorcycling என்பது நமது பயணங்களின் வெளிப்பாடுகள் மற்றும் சவாரியின்போதும், அதற்கு வெளியேயும் நாம் உருவாக்கும் நினைவுகள் பற்றியது வடக்கு மற்றும் மேற்கு இந்தியா, நேபாளம், பூட்டான் இவற்றுக்கான தேசிய வணிகத் தலைவர் மற்றும் உலகளாவிய தலைவர் - அப்பேரல் பிசினஸ், திரு. புனீத் சூட், இந்த முன்முயற்சியின் பின்னணியில் உள்ள கோட்பாட்டைக் கோடிட்டுக் காட்டுகிறார்

"ஒரு பிராண்டாக, Royal Enfield எப்போதும் சுய வெளிப்பாட்டிற்காக இருக்கிறது எங்கள் மோட்டார் சைக்கிள்கள் தனிப்பயனாக்கலுக்கான சரியான தேர்வாகும் #ArtOfMotorcycling- உருவான காரணம், மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் ஆய்வையும், கலாச்சாரத்தையும் கலை என்னும் லென்ஸ் மூலம் கொண்டாடுவதனால்தான்.”

2020ஆம் ஆண்டின் முதல் பதிப்பு வெற்றிகரமாக இருந்தபோதிலும், சீசன் 2 விஷயங்களை ஒரு படி மேலே எடுத்துச் சென்றது முதல் ஆண்டை விட 50% அதிகமாக, 15,000க்கும் அதிகமான பதிவுகளுடன், இந்த முன்முயற்சியை நோக்கி பிராண்டு சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது

திரு. புனித் சூட்: “முதல் சீசனைப் போலவே, இந்த சீசனிலும் 15,000க்கும் அதிகமான பதிவுகளுடன் பிரமிக்க வைக்கும் வரவேற்பைப் பெற்றுள்ளோம் பங்கேற்பாளர்களில் 10 பேரில் 8 பேர் Royal Enfield அல்லாத உரிமையாளர்கள் என்பதையும், பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள் சிறிய நகரங்களில் இருந்து வந்தனர் என்பதையும் நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” 

பங்கேற்பாளருக்கு கொடுக்கப்பட்ட பணி, அவர் ஆக்கபூர்வமான வரைபடங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் மீதான தனது அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதாகும். வெகுமதி? Royal Enfield வணிகத்தில் அவர்களின் வடிவமைப்புகள் இடம்பெறும், அத்துடன் அற்புதமான கற்றல் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கான அணுகல் கிடைக்கும்  

இந்த ஆண்டின் முதல் 3 வெற்றியாளர்கள்: 

இந்த 3 வெற்றியாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், Royal Enfield உடன் இணைந்து கேப்சூல் ரேஞ்சை உருவாக்கவும் ஒரு அற்புதமான வாய்ப்பை வென்றுள்ளனர்

அடுத்த 3 வெற்றியாளர்கள் - பிரசாந்த் சிங், அபிராத் என்சி மற்றும் பிரதமேஷ் ருமாஜி ஷெட்ஜ் ஆகியோர் - Royal Enfield வடிவமைப்புக் குழுக்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர் உண்மையில், Royal Enfield இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு வாக்களிப்பு மூலம் அபிராத், பிரதாமேஷ் ஆகியோர் ரைடர்ஸ் சாய்ஸ் விருதை வென்றனர் ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பேர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா? நிச்சயமாக, இரண்டு பேரும் சமமான வாக்குகளைப் பெற்றனர்!

Art of Motorcycling சீசன் 2க்கான வெற்றியாளர்களைப் பார்வையாளர்கள் மட்டும் தேர்வு செய்யவில்லை. இந்த சீசனில் ஃபேஷன் நிபுணர்களான சாந்தனு & நிகில், , பிரபல புகைப்படக் கலைஞர் பாபி ஜோஷ, காட்சிக் கலைஞரான விமல் சந்திரன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவில் இடம் பெற்றனர். தங்கள் அனுபவத்தைப் பற்றி அவர்கள் கூறியது:

சாந்தனு & நிகில்: ““வடிவமைப்பாளர்களாகிய நாங்கள், கலை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் போது அதை நாங்கள் பாராட்டுகிறோம் உலகெங்கிலும் உள்ள படைப்பாற்றல் மிக்கவர்களிடம் இருந்து இதுபோன்ற அமோகமான வரவேற்பைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது Royal Enfield உடன் இணைந்து Art of Motorcycling இன் ஒரு பகுதியாக இருப்பதற்கும், இந்த ஆழ்ந்த அனுபவத்தில் நாங்களும் இருப்பதற்கும் மிகவும் பெருமைப்படுகிறோம் பங்கேற்பாளர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் மீதான தங்கள் அன்பை ஒருங்கிணைக்க தங்கள் படைப்பை ஆழ்ந்து வெளிப்படுத்திய விதம் ஈர்க்கக்கூடியதாக உள்ளது””

பாபி ஜோஷி: “Art of Motorcycling சீசன் 2 எனக்கு உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்த முன் முயற்சியாகவும் அனுபவமாகவும் இருந்தது நான் தொழில்முறையில் ஒரு புகைப்படக் கலைஞன் மற்றும் காட்சிப்படுத்தும் கலையைப் பார்ப்பதில் எனக்கு எப்போதும் நல்ல உற்சாகம் கிடைக்கும். நுழைவுப் பதிவுகளின் தரம், படைப்பாற்றல், கைவினைத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இவை அபூர்வமானவை என்பதோடு, மிகுந்த ஊக்கமளிப்பதாகவும், தூண்டுதல் அளிப்பதாகவும் இருந்தன நான் நடுவர் குழுவில் ஓர் உறுப்பினராக இடம்பெற்றது, எனக்கு நிச்சயமாக ஒரு மறக்க முடியாத அனுபவமாகவும், பயணமாகவும் இருந்தது ”

விமல் சந்திரன்:: “Art of Motorcycling சீசன் 2-இன் ஒரு பகுதியாக இருந்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சிக் கலைஞனாக, எல்லா வகையான கலைஞர்களையும் ஊக்குவிக்கும் இதுபோன்ற முன்முயற்சிகளை நான் பார்க்க விரும்புகிறேன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது, மேலே ஒரு செர்ரி இருப்பது போல் இருந்தது, நான் அனைத்து பதிவுகளையும் முழுவதுமாக அனுபவித்து மகிழ்ந்தேன்” ” 

 

Royal Enfield எப்பொழுதும் பல ஆண்டுகளாக கலைஞர்களுடன் ஈடுபட்டு, கலைத் திட்டங்களை ஆதரித்து வருகிறது, பல்வேறு கலை வடிவங்கள் எனும் லென்ஸ் மூலம் நெறிமுறைகளைக் கண்டறிதல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது Chifumi’s Art Tour 2016, Ronny Sen’s Highway Star 2017, Tank Project 2017, Wheels & Waves 2017 செயற்திட்டங்கள், Aid of Asia’s endangered elephants 2018 மற்றும் பலவும் இந்த முன்முயற்சிகளில் அடங்கும் Art of Motorcycling என்பது மோட்டார் சைக்கிள் மற்றும் கலையின் மொத்தப் பரப்பையும் கொண்டாடும் மற்றொரு தனித்துவமான தளமாகும்

 

#ArtofMotorcing-இல் 10000க்கும் மேற்பட்ட இடுகைகளுடன், படைப்பாற்றல் மேலோங்கி இருந்தது, தன்னிச்சையான மற்றும் கண்கவர் வடிவமைப்புகள் நாடு முழுவதிலும் இருந்து வந்தன மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் மீதான எங்கள் கூட்டு அன்பைக் கொண்டாட - 2 மாத கால பிரச்சாரம் Royal Enfield சமூகத்தில் ஆர்வத்துடன் சவாரி செய்பவர்கள் முதல் ஆர்வலர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், வரைகலை வடிவமைப்பாளர்கள் வரை பலதரப்பட்ட பார்வையாளர்களை ஒரு பொதுவான காரணத்தின் கீழ் ஒன்றிணைத்தது

← Previous Post


A COLLABORATION TO REMEMBER - Royal Enfield x Alpinestars

Next Post →


CE Certified Jackets Vs CE Certfied Armour

Creating an account has many benefits: check out faster, keep more than one address, track orders and more.

சுய விபரம்
அல்லது